தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் – இன்று திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை காணொலி வாயிலாக  பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல்,நீலகிரி,திருப்பூர், நாமக்கல்,திருவள்ளூர்,நாகப்பட்டினம்,கிருஷ்ணகிரி,அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க இன்று பிரதமர் மோடி சென்னை வர இருந்த நிலையில்,கொரோனா காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்,11 புதிய கல்லூரிகளை காணொலி காட்சி மூலமாக இன்று(ஜனவரி 12 ஆம் தேதி) பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும்,இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ் இடங்களை 1450 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டு வருகின்றன.அதில் சுமார் ரூ.2,145 கோடியை மத்திய அரசும்,மீதியை தமிழக அரசும் வழங்கியுள்ளன.இந்த நிலையில்,தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.