ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்.

கடந்த நவ.3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இதில் பைடன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்ற நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள பைடனுடன், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர்  பக்கத்தில்,’அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு தொலைபேசியின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்திய – அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கான  உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம்.

கொரோனா தொற்று,  காலநிலை மாற்றம் மற்றும் இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு பற்றி விவாதித்தோம். மேலும், அந்த பதிவில், துணை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்றும், அவரது வெற்றி இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மிகப்பெரிய பலமாகவிளங்கும்.

இது துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தின் உறுப்பினர்களுக்கு மிகுந்த பெருமை மற்றும் உத்வேகம் அளிக்கிறது.’  என்றும் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment