கோவையை சேர்ந்த மூதாட்டியின் காலில் விழுந்த பிரதமர் மோடி..! வீடியோ உள்ளே..!

பிரதமர் மோடி 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

டெல்லியில் பிரதமர் மோடி  அவர்கள், உலக சிறுதானிய மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ற்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் சிறுதானிய இயக்கம், 2.5 கோடி விளிம்பு நிலையிலான விவசாயிகளுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களாக அமையும். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுதானிய விவசாயிகளுக்கு முதன்முறையாக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பேசினார்.

மூதாட்டி காலில் விழுந்த மோடி 

இந்த நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட, கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

அண்ணாமலை ட்வீட் 

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உலக சிறுதானியங்கள் மாநாட்டில் பங்கேற்ற கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள். எனது பிரதமர், எனது பெருமை!’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment