ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்.! தொடங்கியது பட்டமளிப்பு விழா.!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 38- ஆவது பட்டமளிப்பு விழா, ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் இன்று வந்தடைந்தார்.

அப்போது, தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டார் பிரதமரை வரவேற்றனர். அதன் பிறகு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு முதல்வர், பிரதமர், ஆளுநர் என மூவரும் சாலை மார்க்கமாக சென்றனர்.

அப்போது, பிரதமர் மோடிக்கு வழிநெடிங்கிலும் பாஜகவினர் மலர்தூவி நல்ல வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி.! அடுத்தடுத்த நிகழ்வுகள்…

பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இந்த நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, பட்டமளிப்பு விழாவில், ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்துள்ளனர்.

தற்போது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அவர் உரையில், நாம் சிறந்த மாநிலமாக இருக்கிறோம். திராவிட மாடல் அரசு அனைவருக்குமான அரசாக செயல்பட்டு வருகிறது. இன்னார்தான் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவரும் படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம் என கூறியுள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆளுநர் ஆர் என் ரவியும் அமர்ந்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்