கொரோனாவிலிருந்து மீண்ட பின் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

கொரோனாவிலிருந்து மீண்ட பின் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் பிரதமர் ஜான்சன்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்த கொரோனா வைரஸானது சிறியவர், பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்கி வருகிறது. உலக அளவில் இதுவரை 38,20,656 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தை பொறுத்தவரையில், 2,01,101 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்சன் தீவிர சிகிச்சைக்கு பின் நம் நலம் பெற்றார். இவர், கொரோனா வைரஸிலிருந்து பூர்ணமாக குணமடைந்த பிறகு முதல் முறையாக புதன்கிழமை (நேற்று) ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் திரும்பினார். 

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று பாராளுமன்றத்தில், ஊரடங்கு தளர்வு குறித்து பேசப்படும் என்றும், நம்மால் விரைவாக வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். பின்னர் விரைவாக நாட்டின் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யலாம் என்றும், சமூகங்களுக்கு தேவையான உதவியைப் பெறுவதை உறுதிசெய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.