மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள ஒரு  ரசாயன ஆலையில் இன்று அதிகாலை ரசாயன வாயு கசிவினால் சுமார் 1000 பேர் வரை பலர் மூச்சுதிணறல், வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டிணத்திற்கு சென்றார்.

 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி நலம் விசாரித்தார். இதற்கிடையே, விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடியும் , சிகிக்சை பெறுவோருக்கு  ரூ.1 லட்சம் நிவாரணம்  என  ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், விஷவாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உடனே பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் கவுன்சில் நோட்டீஸ் விடுத்துள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube