“அமெரிக்க மக்கள் மீண்டும் டிரம்பை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது உறுதியாகியுள்ளது”- ஸ்லோவேனியா பிரதமர்!

அமெரிக்க மக்கள் மீண்டும் டிரம்பை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது உறுதியாகியுள்ளதாக ஸ்லோவேனியா பிரதமர் ஜனெஸ் ஜன்சா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவுப்பெற்றது. சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 248 சபை ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரையடுத்து டிரம்ப், 214 சபை ஓட்டுகள் பெற்று பின்னடைவில் உள்ளார்

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ஸ்லோவேனியா நாட்டு பிரதமர் ஜேன்ஸ் ஜனியா, டொனால்ட் டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், அமெரிக்க மக்கள் மீண்டும் டிரம்பை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது உறுதியுள்ளதாகவும், அதிபர் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் டொனால்ட் டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ்க்கு தனது வாழ்த்துக்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், ஸ்லோவேனியா பிரதமர் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது, பெரியளவில் பேசப்படுகிறது.