குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்பு மனுவை தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு!

குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜெபி நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனிடையே,  குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) அறிவிக்கப்பட்டிருந்தார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக ஆதரவுக் கட்சிகள் வரவேற்பு அளித்தன.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்று டெல்லி வந்த, திரௌபதி முர்மு பாஜகவின் முக்கியத் தலைவர்களையும், பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்தார். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  இதுபோன்று, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment