ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு வரும் 30-ம் தேதி அறுவை சிகிச்சை…!

குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்திற்கு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், மார்ச் 30-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, இன்று இவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, இராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், ஆனால் அவர் மேலும் சில பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவரை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர். இதனையடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்திற்கு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், மார்ச் 30-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.