CLAT 2020 தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு..!

நாட்டின் கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டுக்கான Common Law Admission Test (CLAT 2020)  தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Common Law Admission Test (CLAT 2020) தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

CLAT 2020 தேர்வை கடந்த மே 10-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 22 -ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் ஆன்லைன் மூலம் தேர்வு  நடத்த என்.எல்.யூ கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.

அனைத்து மாணவர்களும் தேர்வை பாதுகாப்பாக எழுத முடியுமா..? என்ற கேள்வி அதிகாரிகளுக்கு எழுந்தது, மேலும், பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு,  Common Law Admission Test (CLAT 2020) தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் Common Law Admission Test (CLAT 2020) தேர்வை   மொத்தம் 70,000 மாணவர்கள் தேர்வு எழுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan