ரூ.1000 பொங்கல் பரிசு – இன்று வழங்கப்படுகிறது

  • பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
  • தமிழகத்தில்  இன்று ( ஜனவரி 9 )முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. 

இந்த பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி,1 கிலோ  சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது.மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உள்ள நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

இன்று பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது.இதற்காக இன்று ( ஜனவரி 9) முதல் 12ஆம் தேதி வரை ஒவ்வொரு கடையிலும், எந்தெந்த தினத்தில், எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு ,பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்ற விபரம், கடைகள் முன் ஒட்டப்படும். எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வரிசை எண் உள்ள தேதிக்கு சென்று, பொங்கல் பரிசை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.