ரூ.50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டையை பறிமுதல் செய்த போலீஸ்.!

ரூ.50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டையை பறிமுதல் செய்த போலீஸ்.வி.சாரணையில் திடுக்கிடும் தகவல்.

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு குடோனனில் நடந்த போலீசார் சோதனையின்போது ரூ.50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த வகையில் உத்தரபிரதேச காவல்துறை மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து நடத்திய இந்த சோதனையில் குற்றம் சாட்டப்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு குற்றவாளியைக் கைது செய்ய டெல்லி பொலிஸ் குற்றப்பிரிவு அம்ரோஹாவுக்கு வந்தது. எங்கள் பொலிஸ் குழுவும் அவர்களுடன் இருந்தது. ஒரு டோனனில் இருந்து சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு பெரிய சந்தன கட்டையை நாங்கள் பறிமுதல் செய்தோம் என்று அம்ரோஹா காவல்துறை கண்காணிப்பாளர் விபின் தந்தா கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் சந்தனக் கடத்தலைப் அனுப்பியது தெரிய வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட சந்தனத்தின் விலை 50 கோடி என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர். பலர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு  வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.