சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா..?

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா..?

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்திக்கான கதையை இயக்குனர் பொன்ராம் சிவகார்திகேயனிற்கு கூறியுள்ளார்.

சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார். காமெடியனாக களமிறங்கிய சிவகார்த்திகேயன் தற்போது கமர்ஷியல் படங்களில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து சில திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது மேலும் இயக்குனர் பொன்ராம் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு திரைப்படதின் கதையை கூறியுள்ளார், ஆனால் சிவகார்த்திகேயன் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் சீமராஜா படத்தில் இருவரும் கூட்டணி வைத்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube