#Breaking:யூ-ட்யூபர் மதனின் வங்கிக்கணக்குகள்- போலீசார் ஆய்வு..!

யூ-ட்யூபில் ஆபாசமாக பேசி சம்பாதித்த மதனின் வங்கிக்கணக்குகள்,முதலீடுகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

யூ-டியூபர் மதன் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்ததன் மூலம் மதன் பிரபலமானார். இதனையடுத்து, யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசி 100 -க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி சைபர் கிரைம் போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் யூ-டியூபர் மதன் விசாரணைக்கு நேரில் ஆஜரகாமல் தலைமறைவாக உள்ளார். இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் பெண்களை ஆபாசமாகத் திட்டுதல், தடைச் செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், யூ-டியூப்பர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர்,மதன் யூ-டியூப் சேனலின் நிர்வாகியாக மதன் மனைவி கிருத்திகா உள்ளதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார்,கிருத்திகாவை கைது செய்தனர்.

இந்நிலையில்,மதனின் வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீடுகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து,முதற்கட்ட ஆய்வின் அடிப்படையில் யூ-டியூப் மூலம் சம்பாதித்த பணத்தை பங்குச்சந்தை,பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்ஸியில் மதன் முதலீடு செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.