பா.ம.க. சமூகநீதி நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி – ராமதாஸ்

சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முதல்வரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பிற்கு அரசியல் கட்சிகள் பல  வரவேற்றுள்ளது. அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த அறிவிப்பினை வரவேற்று தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்து வந்தது. பா.ம.க. சமூகநீதி நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை செப்டம்பர் 17-ஆம் நாள் தான் சமூக நீதி நாள். 33 ஆண்டுகளாக செப்டம்பர் 17-ஆம் நாளை சமூகநீதி நாளாக கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் சமூக நீதி மாநாடு நடத்தினோம். கடந்த ஆண்டு அதே நாளில் தான் ’சுக்கா.. மிளகா… சமூகநீதி’ நூல் வெளியிடப்பட்டது என கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்