முதலில் தேசம்.. நாட்டிற்காக எதனையும் செய்ய வேண்டும்.! மாணவர்களிடையே பிரதமர் மோடி பேச்சு.!

வரும் ஜனவரி 26ஆம் தேதி 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசுதின விழாவில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட NCC மற்றும் NSS மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.

இன்னும் 25 வழக்குகள் கூட போடுங்கள்… நான் பயப்பட மாட்டேன்.! – ராகுல்காந்தி..

டெல்லியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கர்பூரி தாக்கூரின் வாழ்க்கையிலிருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மறைந்த முன்னாள் பீகார் முதல்வர் கர்பூரி தாக்கூர் இரண்டு முறை மாநில முதல்வராக இருந்துள்ளார். விடுதலை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட கர்பூரி தாக்கூர் , சுதந்திரம் பெற்ற பின்னர் பிற்படுத்தப்பட்டோர் வாழ்க்கை நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருக்கு பாரத் ரத்னா விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவித்தார்.  கர்பூரி தாக்கூர் 01988ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார்.

கர்பூரி தாக்கூர் பற்றி பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் பேசுகையில், கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது என்று நாடு நேற்று ஒரு பெரிய முடிவை எடுத்தது. இன்றைய இளைஞர்கள் கர்பூரி தாக்கூரின்யின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் மிகவும் அவசியம். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது என்பது நமது அரசாங்கத்தின் அதிர்ஷ்டம். என்று பிரதமர் கூறினார்.

மேலும் பேசுகையில், கர்பூரி, இளமை காலத்தில் தீவிர வறுமை மற்றும் சாதிய வேறுபாட்டால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உயர் பதவியை அடைந்தார். அவர் இரண்டு முறை பீகாரில் முதலமைச்சராக இருந்தார், கர்பூரி அவரது சமூகத்திற்காக மட்டும் உழைக்கவில்லை. அவரது முழு வாழ்க்கையும் சமூக நீதிக்காக அர்ப்பணித்தவர் என்று புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி.

மாணவர்களுக்கு எப்போதும், தேசம் தான் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். நமது வாழ்க்கை பயணத்தில், நீங்கள் எதைச் செய்தாலும், நாட்டிற்காகச் செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள என மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.