பிரதமர் மோடியின் உடைகள் ஜெர்மனி, இத்தாலியில் தயாரிக்கப்படுபவை – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

ராகுல்காந்தியின் பாதையாத்திரை குறித்து பாஜவினர் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என நாராயணசாமி வேண்டுகோள். 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 8-ஆம் நாளை தொட்டுள்ளது.

‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை பர்பெர்ரி டி-ஷர்ட்டின் விலையை ராகுல் காந்தியின் படத்துடன், “பாரத், தேகோ” என்ற தலைப்புடன் பாஜக ட்வீட் செய்தது.

இதுகுறித்து, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசியஅவர், பிரதமர் மோடியின் உடைகள் ஜெர்மனி, இத்தாலியில் தயாரிக்கப்படுபவை. ராகுலின் டீ-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டவை. ராகுல்காந்தியின் பாதையாத்திரை குறித்து பாஜவினர் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment