தேசிய அளவீட்டு மாநாட்டில் தொடக்க உரை ஆற்றும் பிரதமர் மோடி!

புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய இயற்பியல் ஆய்வகம் நடத்தும் மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்கவுரை ஆற்றுகிறார். 

புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய இயற்பியல் ஆய்வகம் தொடங்கி 74 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இந்த ஆய்வகம் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள்,‘தேசத்தின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அளவியல்’ ஆகும்.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடக்கவுரை ஆற்றவுள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஜனவரி 4, காலை 11 மணிக்கு, தேசிய அளவியல் மாநாடு திறக்கப்படும். தேசிய அணு கால அளவீடு மற்றும் பாரதியா நிர்தேஷக் திராவ்யா ஆகியோர் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்படுவார்கள். தேசிய சுற்றுச்சூழல் தரநிலை ஆய்வகத்திற்கான அடிக்கல் நாட்டப்படும்.’ என பதிவிட்டுள்ளார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப, பூமி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.