ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கும்: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு

குஜராத்தின் நவ்சாரி நகரில் மெகா ரோட் ஷோ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் நாள் பயணமாக குஜராத் சென்றார்.

அகமதாபாத்தில் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன் விழா கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார். இதை தொடர்ந்து மெஹ்சானா நகருக்கு சென்று புகழ்பெற்ற வாலிநாத் மகாதேவ் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் மெஹ்சானாவில் ரூ.13,500 கோடிக்கு அதிகமான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நவ்சாரி நகருக்கு வருகை தந்து மெகா ரோட் ஷோ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கு பல்வேறு திட்டங்களின் தொடங்கி வைத்ததோடு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அங்கு அவர் பேசும் போது, “குஜராத்தில் இன்று மூன்றாவது நிகழ்ச்சியாக இதில் கலந்துக் கொள்கிறேன், மோடி எதைச் சொன்னாரோ, அதைச் செய்வார்… மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேற்றப்படுவதாகவே இருக்கும் என்று நாட்டின் ஒவ்வொருவரும் கூறுகின்றனர்.

இனி புத்தகத்தை பார்த்தே மாணவர்கள் தேர்வு எழுதலாம்! வருகிறது அதிரடி திட்டம்

நான் உங்கள் அனைவருடனும் நவ்சாரியில் இருக்கிறேன். இந்த தருணம் வளர்ச்சிக்கான மிகப்பெரிய கொண்டாட்டமாக உள்ளது. இன்று பிஎம் மித்ரா பூங்காவை உருவாக்கும் பணிகள் தொடங்குகிறது. இது ஜவுளித் துறைக்கான நாட்டிலேயே முதல் பூங்காவாகும். மித்ரா பூங்கா ஜவுளித் தொழிலுக்கு ஊக்கமளிக்கும், ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கும்” என்றார்.

Leave a Comment