கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரிடம் பிரதமர் தீவிர ஆலோசனை!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை இந்தியாவில் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. அதுவரை மக்கள் அத்யாவசிய தேவைகள் தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழகத்தில் ஏற்கனவே தமிழக முதல்வர் மார்ச் 31 வரை அமல்படுத்தியிருந்த 144 தடை பிரதமர் கூறியதுபோல ஏப்ரல் 14ஆம் தேதி வரை தொடரும் என அறிவித்தார். மேலும் வங்கிகள் தடை காலம் பொருட்டு வட்டி வாங்க கூடாது எனவும், அனைத்து பலசர்க்கு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் கடைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவித்தார். 

இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ சிகிச்சைகள்,  ஊரடங்கு உத்தரவு போன்றவைகள் குறித்தும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.