இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் பிரதமர் மோடி – ஜோ பைடன் சந்திப்பு : வெள்ளை மாளிகை!

செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜோ பைடன் சந்திப்பு இரு நட்டு உறவை வலுப்படுத்தும் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். 

செப்டம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்கா புறப்பட உள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் அமெரிக்காவில் வைத்து சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி ஜோ பைடன் மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர், ஜப்பான் பிரதமர் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு இரு நாட்டு உறவை வலுப்படுத்த உதவும் என தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal