தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை… பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடியின் பரிசுகள்..

PM Modi : தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்களை பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் இன்று டெல்லியில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதில் செயற்கை நுண்ணறிவு, உலக காலநிலை மாற்றம், பெண்களுக்கான முன்னுரிமைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்தனர்.

அதில், பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இதில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும், கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும், கிராமப்புறங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை பிரதிநிதித்தவப்படுத்த வேண்டும் என்றும், பெண்களின் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

இந்த உரையாடல் நிகழ்ந்த பிறகு, இறுதியில் நரேந்திர மோடிக்கு பில் கேட்ஸ், ஊட்டச்சத்து குறித்த ஒரு புத்தகத்தினை பரிசாக வழங்கினார். அதற்கு பதிலாக இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய பொருட்களை பிரதமர் மோடி பில் கேட்ஸ்க்கு பரிசாக வழங்கினார்.

பிரதமர் மோடி கொடுத்த பரிசுகளின், நீலகிரி, டார்ஜிலிங் தேயிலை, காஷ்மீர் குங்குமப்பூ, தூத்துக்குடி முத்து கற்கள், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட குதிரை பொம்மைகள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி, பில்கேட்ஸுக்கு பரிசாக அளித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.