பிளாஸ்டிக் பாட்டில்கள் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை உடனடியாக அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மேலும், உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க மையம் அமைக்க உத்தரவிட்டதை அமல்படுத்தவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உதகை, கொடைக்கானல் சோதனை சாவடிகளில் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்ட்டுள்ளது. எனவே, ளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment