4-ம் கட்ட ஊரடங்கு தளர்வு..மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி..?

 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வு மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர்,மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக  ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி உடன் 3-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது.

இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4-ம் கட்ட தளர்வுகளில் நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும், அந்தந்த மாநிலங்கள்  கொரோனா தாக்கத்தை பொறுத்து முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்,பள்ளி, கல்லூரிகளை திறக்க  அனுமதிக்காது எனவும்  தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும் என கூறப்படுகிறது.

 

 

author avatar
Castro Murugan