நேற்றைய விலையில்...18வது நாளில் பெட்ரோல்- டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.83.04 க்கும், டீசல் லிட்டர் ரூ.76.77க்கும் விற்பனை

By kavitha | Published: Jun 24, 2020 07:16 AM

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.83.04 க்கும், டீசல் லிட்டர் ரூ.76.77க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது. இந்நிலையில் 18-வது நாளாகிய இன்று பெட்ரோல் , டீசல் விலையானது நேற்றைய விலையில் இருந்து சிறிதும் மாற்றிமின்றி விற்பனை செய்யப்படுகிறது.அதன் படி நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17  பைசா உயர்ந்து 83.04க்கு விற்பனைச் செய்யப்பட்டது. மேலும்  டீசல் விலையும் லிட்டருக்கு 47 பைசா உயர்ந்து 76.77க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்று இதே விலையே தொடர்கிறது. கடந்த 18 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.55  ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
Step2: Place in ads Display sections

unicc