கோவையில் தெற்கு தொகுதியில் கமலஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் மனுக்கள் ஏற்பு…!

கோவை தெற்கு தொகுதியில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 33 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

கோவை தெற்கு தொகுதியில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் டோப்போ தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.