உணவகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த கோரிய மனு தள்ளுபடி!

ஓட்டல்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடகோரிய வழக்கு தள்ளுபடி.

அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடகோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சுத்தமான, தரமான உணவு சமைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிசிடிவி பொருத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் நடராஜன் வழக்கு தொடுத்திருந்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்தியது. இதில் 12 சதவீதத்திற்கு மேலான உணவகங்கள் போதுமான அளவு தரத்துடன் செயல்படவில்லை என தெரிய வந்துள்ளது என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை பல உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் இதனால் மனுதாரரின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை எனவும் கூறி வழக்கை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment