#BREAKING: திமுக எம்.எல் .ஏ செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு

  • போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து உள்ளது.
  • சென்னை குற்றப்பிரிவு போலீஸ் இன்று காலை முதல் செந்தில் பாலாஜியின் அலுவலகம் , வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை முதல் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செந்தில் பாலாஜியின் ஜவுளி ஏற்றுமதி அலுவலகம் மற்றும் அவரின் தம்பி அசோக் வீட்டிலும் வீட்டில் சோதனை நடத்தி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில்  முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளார்.

இவரின் முன்ஜாமீன் மனுவை வருகின்ற திங்கள் கிழமை விசாரிப்பதாக  நீதிபதி சேஷசாயி கூறியுள்ளார்.செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா இறந்த பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

இதையெடுத்து திடீரென அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து உள்ளது.

author avatar
murugan