பஹ்ரைன் நாட்டில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி …!

பஹ்ரைன் நாட்டில்  அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனவிற்கு எதிராக இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தான் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு  கடந்த வாரம் தான் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கியது.

இதனையடுத்து இங்கிலாந்து, ஹாங்ஹாங், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கொசக்சின் தடுப்பூசிகள் அவசரகால அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது மத்திய கிழக்கு நாடாகிய பஹ்ரைன் நாட்டிலும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal