மத வழிபாட்டு தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதி – கர்நாடக அரசு!

நாளை முதல் கர்நாடகாவில் மதவழிபாட்டு தலங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் மக்களின் வாழ்வாதாரம் கருதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் தற்போது கொரோனா இரண்டாம் அலை காட்டுக்குள் வந்துள்ள நிலையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து நாளை முதல் கர்நாடக மாநிலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத வழிபாட்டு தலங்களுக்கு வரக்கூடிய பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திருவிழாக்கள் மற்றும் மத ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal