புழல் சிறையில் இருந்து இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு கிடைத்திருக்கும் இந்த பிணை இடைக்கால நிவாரணம் தான். பிணை கிடைக்க காரணமான அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. முழுமையான விடுதலை பெறும் வரை உங்களின் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் எங்கள் போராட்டம் தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.