மக்கள் முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா நன்கொடை அளிக்க வேண்டும்! டெல்லி முதல்வர் வேண்டுகோள்!

மக்கள் முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா நன்கொடை அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் வேண்டுகோள்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் ஹெஜ்ரிவால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து சென்றவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதன்படி, டெல்லியில், கொரோனா வைராஸ் பிரச்சனையில் இருந்து குணமடைந்தவர்கள், மற்ற நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பிளாஸ்மா தானம் செய்வதால், எந்த தீங்கும் ஏற்படாது என்றும், இந்த செயல்முறை யாரையும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இரத்த தானம் செய்வதை விட பிளாஸ்மாவை தானம் செய்வதற்கான செயல்முறை எளிதானது என்று தெரிவித்துள்ள அவர், டெல்லியில், இதுவரை கொரோனா வைராஸால், 99,444 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் ஹெஜ்ரிவால் இப்படி வேண்டுகோளை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.