ரசாயனம் இல்லாத இயற்கை உணவை உண்ண வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் உருவாகி உள்ளது-ஜக்கி வாசுதேவ்

ரசாயனம் இல்லாத இயற்கை உணவை உண்ண வேண்டும் என்ற ஆர்வம்
உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் உருவாகி உள்ளது என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் நேற்று  ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு திருச்சி  தொடங்கியது. இதில்  ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் வேளாண் வல்லுனர் சுபாஷ் பாலேக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மறைந்த நெல் ஜெயராமன் அவர்களுக்கு ஒரு
நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பாரம்பரிய நெல்
விதைகளை முன்னோடி இயற்கை விவசாயிகளுக்கு ஈஷா அறக்கட்டளை
நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் , ரசாயனம் இல்லாத இயற்கை உணவை உண்ண வேண்டும் என்ற ஆர்வம்
உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் உருவாகி உள்ளது. ஆனால்,
தேவையான செயல்களை நாம் இன்னும் செய்யவில்லை. மிசோரம்
மாநிலம் முழுமையான இயற்கை விவசாய மாநிலமாக மாறி வெற்றி
கண்டுள்ளது. ஆந்திர மாநிலம் 2022-ம் ஆண்டுக்குள் முழுக்க முழுக்க
ரசாயனம் இல்லாத விவசாயத்துக்கு மாற உறுதி எடுத்துள்ளது.
இதேபோல், தமிழகத்தையும் இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற
வேண்டும்.
அதற்கு அரசுகள் சட்டங்கள் கொண்டு வந்தால் போதாது. விவசாயிகள்
மத்தியிலும் அந்த ஆர்வம் உருவாக வேண்டும். அந்த நோக்கத்தில் தான்
இந்த இயற்கை விவசாய பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதில்
சுமார் 3,000 விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இதன் அடுத்தக்கட்டமாக
தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை மிக தீவிரமாக கொண்டு
செல்வதற்காக பல படிகளை எடுத்து வருகிறோம். அதில் ஒரு படியாக
ஈஷா யோகா மையத்தில் ஒரு வேளாண் மையத்தை நிறுவும் பணிகள்
நடந்து வருகிறது.

அதேபோல் விவசாயத்தை பாதுகாக்க ஜாதி, மதங்களை கடந்து அனைத்து
விவசாயிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

Leave a Comment