மக்களே ஜாக்கிரதை…! இனிமேல் வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

H1 N1 வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல். 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த ஜனவரி முதல் இப்போது வரை 9 குழந்தைகள் H1 N1 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சியில் தான் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம்.  சர்.பிட்டி.தியாகராயர்,காமராஜர், எம்.ஜி.ஆர்,கருணாநிதி வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டுவந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment