மீண்டும் வலுக்கும் இலங்கை போராட்டம்.! காவல்துறையினருடன் கடும் மோதல்.!

இலங்கை அரசை எதிர்த்து தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஜூலை மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அதிபர் மாளிகை, ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசமானது.

பின்னர் ராஜபக்சேகள் ராஜினாமா செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் கடுமையாக உயர்ந்த விலை வாசியை கண்டித்து போராட்டங்கள் மீண்டும் வலுத்து வருகிறது. இலங்கை அரசை எதிர்த்து தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

அவர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட சென்றதால், அங்குள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மிக பரபரப்பாக இருக்கிறது. இந்த போராட்டத்தில் மக்களுடன் எதிர்க்கட்சியினர், தொழிற்சங்கத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.

அதே போல யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் ரணில் விக்ரமசிங்கே விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதில் பொருளாதார நிலையை சமாளிக்க கடுமையான வரி விதிக்கப்படுமென கூறப்படுகிறது. அதனை எதிர்த்து தான் இந்த போராட்டம் நடைபெறுவதாக குறிப்பிடப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment