#BREAKING: தூத்துக்குடி தூய பனிமய மாதா கொடியேற்ற விழாவில் மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை – சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழாவில் மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

தூத்துக்குடி புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழா நிகழ்வில் மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வருகின்ற 26-ஆம் தேதி முழு முடக்கம் என்பதால் மக்கள் வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தூத்துக்குடி பனியமாதா ஆலயத்திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் எனவும் பனிமய மாதா பேராலய விழா ஜூலை 26 முதல் ஆக-5ஆம் தேதி வரை நடைபெறுகிறது என தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.