பயங்கரவாதிகளை இந்திய எல்லையில் ஊடுருவ பாகிஸ்தான் முயற்சி

இந்திய எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக லடாக் எல்லையில் பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டது.பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.தொடர்ந்து இரு தினங்களாக பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சமீப காலங்களில், இந்தியாவுடன் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது இந்தியா மற்றும் சீனா  இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில் ,இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், அங்கிருந்து   பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காஷ்மீரில் உள்ள இந்திய எல்லை வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ  பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்திய எல்லைக்குள் வரும் நோக்கில் பல்வேறு இடங்களில்  பயங்கரவாதிகள் ஒன்று கூடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பாகிஸ்தான் ராணுவமும்  உதவி செய்துள்ளது. இந்தியாவின் எல்லை பகுதிக்கு அடுத்துள்ள பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் பயங்கரவாதிகள்  ஒரு சில சுற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனால் எல்லைப் பகுதியில்  இந்திய ராணுவம்  தீவிர உஷார் நிலையில் உள்ளது.