காஷ்மீர் விவகாரத்தில் முட்டாள்தனமான முடிவை பாகிஸ்தான் எடுக்காது-  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

காஷ்மீர் விவகாரத்தில் முட்டாள்தனமான முடிவை பாகிஸ்தான் எடுக்காது என்று  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில்  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்  பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உலக நாடுகள் இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கிறது’. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி.இதில் எந்த முடிவையும் இந்தியா தான் எடுக்கும்.

இந்தியாவிடம் ஏற்கனவே பலமுறை பாடம் கற்றுள்ளதால் முட்டாள்தனமான முடிவை பாகிஸ்தான் எடுக்காது என்று  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.