505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன – முதல்வர் ..!

திமுக தேர்தல் நேரத்தில் அழைத்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின்னர், காரில் மூலம் பாப்பாபட்டி கிராமத்த்திற்கு சென்றார். முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

பாப்பாபட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம் கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்தார். கிராம கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகள், தேவைகள் மற்றும் திமுக ஆட்சி குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராம மக்களை சந்தித்தது மகிழ்ச்சி. கிராமம் தான் இந்தியா என்று கூறியவர் மகாத்மா காந்தி. மதுரை, பாப்பாபட்டி, கீரிப்பட்டி நாட்டார்மங்கலதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழல் இருந்தது.

2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்தோம். 2006-இல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி மேற்கொண்டேன். 2006-இல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுத்தார்.  பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்தியதற்காக சமத்துவப் பெரியார் என்ற பட்டம் கலைஞருக்கு வழங்கப்பட்டது.

பாப்பாபட்டி கிராம மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றித் தரப்படும். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், மறக்கமுடியாத நிகழ்வாக பாப்பாபட்டி கிராம சபை கூட்டம் அமைந்துள்ளது என தெரிவித்தார். திமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். திமுக தேர்தல் நேரத்தில் அழைத்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாப்பம்பட்டியில் ரூபாய் 23.50 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும். நியாய விலைக்கடை, கதிர் அறுக்கும் களம்,  மேல்நிலை தொட்டி உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

author avatar
murugan