சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்த செருப்பு..!-சிறந்த படமாக தேர்வு

  • 17 வது சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்தசெருப்புவிற்கு விருது. 
  • ஒத்த செருப்பு சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.

தலைநகர் சென்னையில் 17 வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகின்றது.இந்த விழாவில் நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.தமிழ் திரைப்படங்கள் என்ற பிரிவில் ஒத்த செருப்பு படத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசம் என்றால் அது பார்த்திபன் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் இவருடைய நடிப்பு மற்றும் இயக்கும் படங்களில் இருந்து நாம் அறியலாம்.அப்படி ஒரு வித்தியாசமான தலைப்பில் வந்த படம் ஒத்த செருப்பு.ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம் விருதுகளின் வரவேற்வையும் பெற தவறவில்லை என்பது தற்போது கிடைத்துள்ள விருது மூலம் உறுதியாகி உள்ளது.

 

author avatar
kavitha