Oscars 2024: ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா எங்கு? எப்போது?

Oscars 2024: சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான (அகாடமி விருது) ஆஸ்கர் விருதினை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2024) ஆஸ்கர் வழங்கும் விழா, மார்ச் 10 ஆம் தேதி அமெரிக்காவின்  கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.

READ MORE – அத மட்டும் விடவே மாட்டேன்! நடிகை ரித்திகா சிங் பிடிவாதம்!

உலகளவில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான இந்த விழாவை, ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். ஜிம்மி கிம்மல் நான்காவது முறையாக இந்த அகாடமி விருதுகளை தொகுத்து வழங்குகிறார்.

READ MORE – மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்.!

அவர் இதற்கு முன்பு, 2017, 2018 மற்றும் 2023 -ல் நடைபெற்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள நடிகர்கள், படங்கள் குறித்த பரிந்துரைகள் கடந்து மாதம் அறிவிக்கப்பட்டது.

READ MORE – லைக்காவுக்கு செலவு இழுத்துவிட்ட ஷங்கர்! இந்தியன் 2 ஒரு பாட்டுக்கு இத்தனை கோடியா?

அமெரிக்கா நேரப்படி, நாளை (மார்ச் 10-ம் தேதி) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அதே இந்தியாவில், நாளை மறுநாள் (மார்ச் 11-ம் தேதி) அதிகாலை 5:30 முதல் தொடங்கி நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவின் நேரடி ஒளிபரப்பை இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலமாக நேரடியாக பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

READ MORE – ஆஸ்கர் விருது : 13 பிரிவுகளில் தேர்வான ஓப்பன்ஹெய்மர்!

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில், சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட 13 பரிந்துரைகளுடன் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் முன்னணியில் உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட பிற படங்களில் பார்பி, புவர் திங்ஸ் மற்றும் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் ஆகியவை உள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment