மதுரை உயர்நீதிமன்ற கிளை அருகே செயல்பட்டு வரும் மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு!

மதுரையில் ஒத்தகடைப் பகுதியில், நீதிமன்றம் மற்றும் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு.

மதுரையில் ஒத்தகடைப் பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை செயல்பட்டு வருகிறது. இதனருகில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் செயற்பட்டு வருகின்ற நிலையில், இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது.

இதனால் அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது. மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் காலி மதுபான பாட்டில்கள் வீசுகின்றனர். எனவே நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றம் மற்றும் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பிட்ட காலத்தில் இடமாற்றம் செய்யவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் இந்த கடையை மூடி சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.