ஆன்மீகவாதியான ரஜினிகாந்த் அரசியல்வாதியாக முடியாது – காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி!

ஆன்மீகவாதியான ரஜினிகாந்த் அரசியல்வாதியாக முடியாது – காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி!

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, எனவே அவர் அரசியல்வாதி ஆக முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் தானும் கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். எனவே இவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இவரது அரசியல் குறித்து மற்ற அரசியல் தலைவர்களும் நடிகர்களும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இது குறித்து பேசியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, எனவே அவர் அரசியல்வாதியாக முடியாது எனவும், முதல்வராக விருப்பமிலலாத ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவரை விரும்புகிறவர்கள் கூட அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube