ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க உத்தரவு!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக சீர்திருத்த காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தர காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததால் சுமார் 20,000 பேர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் மாத ஊதியம் 2 வாரங்களாக வழங்கப்படாத நிலையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை உடனே சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், சம்பள பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பித்து ஊதியம் பெற்று உடனடியாக வழங்க வேண்டும் என்றும்  ஊதியம் வழங்குவதில் காலதாமதம் கூடாது எனவும் பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment