எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைவீர்களா? ஓ. பன்னீர்செல்வம் பதில்

சசிகலாவுடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அங்கு சசிகலாவும் வந்திருந்த நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்து சசிகலா கூறும்போது, “குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் இந்த சந்திப்பு நடந்தது” என கூறினார். பின்னர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பும் போது சசிகலாவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. இதை மரியாதை நிமித்தமான சந்திப்பாக கருதுகிறேன்.

கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக்கூடாது..! காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் மாபெரும் வெற்றி பெறும் நிலை உருவாகும். பாஜக, கூட்டணிக்காக எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “ இதை நீங்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும்” என பன்னீர்செல்வம் கூறினார்.

 

Leave a Comment