OPPO Reno 11 சீரியஸ்… மீடியாடெக் டைமன்சிட்டி சிப்களுடன் இந்தியாவில் அறிமுகம்!

ஒப்போ ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒப்போ ரெனோ 11 (OPPO Reno 11) சீரியஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ (OPPO) நிறுவனத்தில் இருந்து இப்படிப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை தானே இவ்ளோ நாளா பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, அட்டகாசமான அம்சங்களுடன் ஒப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 11 (Oppo Reno 11) என 2 புதிய மாடல் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அது தற்போது நடந்துள்ளது.

இந்த புதிய மடல்கள் என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்..

மீடியாடெக் டைமன்சிட்டி (MediaTek Dimensity) சிப்களுடன் OPPO Reno 11 சீரியஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ நேர்த்தியான வடிவமைப்பு, வேகமான சார்ஜிங் மற்றும் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்டு இயங்கும். Oppo Reno 11 சீரியஸ் – CPH2599 மாடல் எண்ணுடன் Oppo Reno 11 மற்றும் மாடல் எண் CPH2607 உடன் Oppo Reno 11 Pro ஆகியவை வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்களுமே 3 முக்கிய ஆண்ட்ராய்டு 17 வரையிலான ஓஎஸ் அப்டேட்கள் (Android Updates) மற்றும் 4 ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates) பெறும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 11 சீரிஸின் சிப்செட்களை பொறுத்தவரை, ரெனோ 11 மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 SoC) உடனும், ரெனோ 11 ப்ரோ மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (MediaTek Dimensity 8200 SoC) உடனும் கொண்டு இயங்கும்.

புது புது கலர்! கண்களை கவரப்போகும் வாட்ஸ்அப்! புது அப்டேட்!

இரண்டு மாடல்களும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் 6.70 – இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. மேலும், 50 மெகா பிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும், 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 11 ப்ரோவில் 80W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்-யுடன் 4,700 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதுபோன்று, ஒப்போ ரெனோ 11 சீரியஸ் 67W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்-யுடன் 4,800 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

மேலும் அம்சங்களான WiFi 6, 5, புளூடூத் 5.3, NFC மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவை அடங்கும். ஏஐ எனேபிள்டு ஸ்மார்ட் டச், புதுப்பிக்கப்பட்ட ஃபைல் டாக், ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் அம்சம் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் போன்ற பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. 8GB ரேம், 128GB ரோம் கொண்ட ஒப்போ ரெனோ 11 சீரியஸ்-யின் விலை ரூ.29,999 ஆகவும், அதே சமயம் 12GB ரேம், 256GB ரோம் கொண்ட ஒப்போ ரெனோ 11 ப்ரோவின் விலை ரூ.39,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்