‘ஆபரேஷன் லோட்டஸ்’ – செப். 22 பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு!

பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசு மீது செப். 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியில் ஆளும் பாஜக, ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் எம்எல்ஏக்களை பேரம் பேசுவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர்.

பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்தாலும் அவ்வப்போது, எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றன. இதன் காரணமாக டெல்லியில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, அதில் வெற்றி பெற்றிருந்தது. அந்தவகையில் பஞ்சாபிலும் ஆளும் கட்சியின் எம்எல்ஏக்களை வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாக அம்மாநில முதல்வர் குற்றசாட்டியுள்ளார்.

இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்பதற்கு மத்தியில், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செப்டம்பர் 22-ஆம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம், மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, பாஜக தனது 7 முதல் 10 எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டினார். பாஜக தங்களுக்கு தலா 25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறார் அம்மாநில முதலமைச்சர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment