செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி திரையரங்குகள் திறக்க அனுமதி.!

நாடு முழுவதும் 4ம் கட்ட மொத்தமுடக்கத் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், 4ம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது. அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நான்காம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகள் படி, செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்று, மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்