100 பைக் மட்டுமே.. முன்பதிவுக்கு முந்துங்கள்! KTM நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பு!

KTM : கேடிஎம் நிறுவனம் தனது அடித்த பிரமாண்ட படைப்பான 2024 RC 8C பைக் மாடலை ஒரு லிமிடெட் எடிசனாக வெளியிட்டுள்ளது. அதன்படி, வெறும் 100 பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், இதற்கான முன்பதிவு KTM நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 20ம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

Read More – சும்மா கெத்தா, ஸ்டைலா இந்தியாவில் என்ட்ரி கொடுக்கு காத்திருக்கும் Honda Africa Twin!

முன்பதிவு ஐரோப்பா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மட்டுமே தொடங்கும் என்றும் 2024 RC 8C பைக் மாடலை வாங்க விரும்புவர்கள் தங்கள் அருகிலுள்ள KTM டீலர்ஷிப் ஷோ ரூம்களை அணுகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் விலை விலை USD 41,499 (சுமார் ரூ.34.37) லட்சமாக இருக்கும்.

Read More – கார் விரும்பிகளே எச்சரிக்கை… வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு.. இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் தெரியுமா?

இந்த 2024 RC 8C பைக்கானது KTM நிறுவனத்தின் தனித்துவமான ஸ்டைலுடன் MotoGP வெர்சனால் ஈர்க்கப்பட்ட அதாவது, ஸ்போர்ட்ஸ் மற்றும் ரைடிங்-க்கான ஒரு பிரமாண்ட தோற்றத்துடன் சந்தையில் வெளிவந்துள்ளது.

2024 RC 8C சிறப்பம்சங்கள்:

2024 KTM RC 8C பைக்கை பொறுத்தவரை, இது ஒரு GP பைக். RC 16 இலிருந்து உத்வேகம் பெறுகிறது. ஒரு நேர்த்தியான மற்றும் ஏரோடைனமிக் வடிவமைப்பை கொண்டுள்ளது. கார்பன் கெவ்லரில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 135bhp ஆற்றலை வழங்கும் 889cc LC8c இணையான பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

12,000rpm ரெவ் லிமிட் மற்றும், டாப் டிராயர் WP சஸ்பென்ஷனுடன் வெளிவந்துள்ள இந்த பைக்கானது 142 கிலோ எடையை கொண்டுள்ளது. 6 கியர்களை கொண்ட கியர்பாக்ஸ், 43mm WP அபெக்ஸ் ப்ரோ ஃபோர்க்குகள் மற்றும் WP அபெக்ஸ் ரிமோட் அனுசரிப்பு மோனோஷாக் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

Read More – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது!

பிரேக்கிங் சிஸ்டத்தை பொறுத்தவரை, 290mm டூயல் பிரண்ட் டிஸ்க் மற்றும் 230mm ப்ரெம்போ 19ஆர்சிஎஸ் கோர்சா கோர்டா ரேடியல் மாஸ்டர் பிரேக் சிலிண்டர்களுடன் பின்புறத்தில் டிஸ்க் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அக்ரபோவிக் ரேசிங் எக்ஸாஸ்ட், ரேஸ்-ஸ்பெக் பிரேம்போ பிரேக்குகள் ஆகும். அதேசமயம் இலகுரக டைமாக் வீல்கள் உள்ளிட்ட மேலும் இதுபோன்று பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த பைக்.

மேலும், இந்த 2024 KTM RC 8C பைக்கானது ஐந்து-இன்ச் TFT ஹவுசிங் ரேஸ் டேஷ் மற்றும் டேட்டா லாகர் ஆகியவை உள்ளமைக்கப்பட்ட GPS செயல்பாடுகளுடன் வருகிறது. வெள்ளை மற்றும் ஆரஞ்சு  நிறத்தில் வெளிவந்துள்ளது. இதில் குறிப்பாக KTM RC 8C பைக்கை தொழில்நுட்பம் இன்றி கைகளால் உருவாக்கப்பட்டவை ஆகும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment