#BREAKING: ஆன்லைன் வகுப்பு.., ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடு..?

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக நாம் புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது.

தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. சென்னையில் இணையவழி வகுப்பில் பள்ளி ஆசிரியர் ஆபாசமாக நடந்து கொண்டு சம்பவத்தை அடுத்து விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆன்லைன் வகுப்பின் போது ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு பேசக்கூடாது எனவும் ஆன்லைன் வகுப்பிற்காக ஒதுக்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மட்டுமே எந்த செய்தியாக இருந்தாலும் வெளியிடவேண்டும். தனிப்பட்டமுறையில் இந்த செய்திகளையும் அனுப்பக்கூடாது என போன்ற விதிமுறைகளை அரசு விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பாலியல் தொடர்பான பிரச்சினைகள் வரும்போது அவற்றை விசாரிக்க உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை அமைப்பது பற்றியும், ஆன்லைன் வகுப்பில் பள்ளி ஆசிரியர் ஆபாசமாக நடந்து கொண்ட  வழக்கு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு குழு அமைத்து அந்தக் குழு விசாரணை நடத்தும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக நாம் புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan